செங்கோட்டையன் விசுவாசமானவர்...அவர் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை - ஓபிஎஸ் பேட்டி!
செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது இந்த தகவலை மேலும் வலுப்படுத்தியது. பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் பங்கேற்கவில்லை என அவர் விளக்கம் அளித்தார். இருந்த போதிலும் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் விசுவாசமானவர். எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் அவர். செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை.
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது. மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும் என கூறினார்.


