முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை!!

 
ops mk stalin

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை  பணி நிரந்தரம் செய்ய   ஆவன செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

stalin

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா  கொடுந்தொற்றுநோய் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த போது பராமரிப்பு பணிகளை மேலும் வலுவடைய செய்யும் விதமாக ,அதிமுக ஆட்சிக்காலத்தில் 2500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதகாலத்திற்கு நியமிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ,மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் தேவைக்கேற்ப பணியமர்த்தப்பட்டனர்.  இவர்களது பணி போற்றத்தக்கதாக  அமைந்தாலும் இவர்களின் சேவை,  தேவை என்ற நிலை இருந்ததாலும் ஆறு மாத காலம் முடிந்த பின்னரும் , அவருடைய பணி தொடர்ந்தது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

ops stalin

இந்த சூழ்நிலையில் கொரோனா  இரண்டாவது அலை  முற்றிலும் அகலாத நிலையில் மூன்றாவது அலை வருவதற்குரிய வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த தருணத்தில் ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாகவும்,  இதன் காரணமாக பணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விடுவிக்கப்படலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளதாகவும் உள்ளது.  எனவே பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

ops

கொரோனா  நோய்த்தொற்றின் முதல் நிலை மற்றும் இரண்டாவது அலைக்கு உச்சத்தில் இருந்தபோதே தங்களின் உயிரை துச்சமென மதித்து ஆபத்தான காலங்களில் பணியாற்றிய அவர்களது சேவையையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு,  கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்குவது மக்கள் நலன் பயக்கும் செயல் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் இதை உடனடியாக தலையிட்டு கொரோனா தொற்றின்  தாக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையை கருத்தில் கொண்டு,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அழைத்து பேசி, பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.