தனிக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்?
Dec 14, 2025, 15:17 IST1765705658315
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் டிச. 23ஆம் தேதி நடைபெறுகிறது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை 'கழகமாக' மாற்றியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். டிச.23ம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறுவதாக இருந்த இந்த ஆலோசனை கூட்டம், டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், ஆலோசனை கூட்டத்தை ஓபிஎஸ் ஒத்திவைத்துள்ளார்.


