ஓபிஎஸ் விரைவில் சுற்றுப் பயணம் - கோவை செல்வராஜ் தகவல்!!

 
tn

11ஆம் தேதி பொதுக்குழு என்பது இனி கனவில்தான் நடக்கும் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு நேற்று முன்தினம் கூட்டப்பட்ட நிலையில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23  தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு,  அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேற அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த விவகாரத்தால் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை  நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ops

இந்த சூழலில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருந்தாலும் ஏற்கமாட்டோம் ஜூலை 11ம் தேதி நடைபெறும்.  பொதுக்குழுவில் திட்டமிட்டபடி எடப்பாடிபழனிசாமி ஒற்றை தலைமை ஏற்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ops eps

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், 11ஆம் தேதி பொதுக்குழு  என்பது கனவில் தான் நடக்கும். அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது. அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள் . தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது.  ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானால் அவை தலைவரை தேர்வு செய்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.