ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை..

 
ops

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்கிற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை  விசாரணைக்கு வருகிறது.  

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும், ஜூலை 11ம் தேதி நடைபேற்ற  அதிமுக பொதுக்குழு  தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.  அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி,  நேற்றையதினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். 

high court

 பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும்,  பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி  செய்யப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.  இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவை எதிர்த்து  இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டை  மனிவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் இன்று விசாரனைக்கு வர இருந்தது.  இதற்கிடையே  ஓ.பி.எஸ். மனு மட்டும் பட்டியலிடப்பட்ட நிலையில், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது  மனுக்கள் பட்டியலிடப்படவில்லை.  மேலும், தனி நீதிபதி உத்தரவின் சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாததால்,  4 பேரின் வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. ஆகையால் இந்த வழக்கு  நாளை (30-ந்தேதி) விசாரணைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.