சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
Dec 3, 2025, 12:51 IST1764746505665
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இன்றுடன் கனமழை ஓயும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


