ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் : மாதாந்திர அட்டையை புதுப்பிக்க ஆவின் கட்டுப்பாடு..

 
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் : மாதாந்திர அட்டையை புதுப்பிக்க ஆவின் கட்டுப்பாடு..

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க, ஆவின் நிர்வாகம்  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாகெட்டுகள் விநியோகம்  செய்யப்பட்டு வருகின்றன. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்துள்ளன.  இதனை அடுத்து அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

aavin

இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பிறகு தங்களுடைய மாதந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒரு குடும்ப பால் அட்டைக்கு தினமும் ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.