இருந்த ஒன்னும் போச்சு! ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுக-வில் இருந்து நீக்கம்

 
ma sekar

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அமமுக-விலிருந்து நீக்கம் செய்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.M.சேகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தஞ்சையை சேர்ந்த எம்.சேகர் இன்று மதியம் 12 மணிக்கு அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.