புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு!
Nov 29, 2025, 20:30 IST1764428449468
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபான விடுதிகள் மற்றும் கடைகளை இரவு 8 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கடைகள், சாராயக்கடைகளை மூட புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை முழுவதும் விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. மேலும் இரவு 8 மணிக்குள் மதுக்கடைகள் மற்றும் கேளிக்கை நடனம் நடைபெறும் ரெஸ்ட்ரோ பார்களை மூடவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


