திருவண்ணாமலையில் டாஸ்மாக்கை மூட உத்தரவு

 
ஹ் ஹ்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 3 நாட்களுக்கு மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் இன்று மகா தேரோட்டமானது காலை தொடங்கியது. இன்று காலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிந்துள்ளனர். வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறையின் முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றபட உள்ளது. 

இந்நிலையில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 3 நாட்களுக்கு மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிச. 2,3,4 தேதிகளில் தனியார் மற்றும் டாஸ்மாக் மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.