“முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் மின்தடை கூடாது”- அதிகாரிகளுக்கு பறந்த கடிதம்
Jun 23, 2026, 21:47 IST1782231437264
முதலமைச்சர் கலந்துகொள்ளும் மின்வாரிய நிகழ்வில் மின்தடை ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் 379 உதவியாளர்களுக்கு மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்நிகழ்ச்சியின்போது மின்சாரம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கலைவாணர் அரங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

