பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜன.10-க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உத்தரவு

 
ஜன. 10க்குள் விலையில்லா வேட்டி சேலை.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய டிசைன்களில் வழங்க திட்டம்..  ஜன. 10க்குள் விலையில்லா வேட்டி சேலை.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய டிசைன்களில் வழங்க திட்டம்.. 

பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Image

இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 கோடி ரூபாய் அனுமதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், பொங்கல் இலவச வேட்டி சேலையை ஐனவரி 10ம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன்படி, 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது.