'நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும்' - கொடிப்பாடலை வெளியிட்ட விஜய்..

 
'நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும்' - கொடிப்பாடலை வெளியிட்ட விஜய்..


‘நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப்பாடலை அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார்.  

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.  

'நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும்' - கொடிப்பாடலை வெளியிட்ட விஜய்..

பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில்  இன்று காலை  9.25 மணிக்கு  கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.  இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது.  கொடியை அறிமுகம் செய்த பின்னர் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், கட்சிக்கொடியை ஏற்றினார்.  தொடர்ந்து கட்சியின் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்தக் கட்சிக் கொடிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி இருப்பதாகவும்,  கட்சியின் முதல் மாநாடு நடக்கும்போது கொடிக்கான விளக்கம் கொடுக்கப்படும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கட்சியின் கொடிப் பாடலில் போர்க்களத்தில் யானைகள் சண்டையிடுவது போன்று காட்சியமைக்கப்பட்டு கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பாடலை தற்போது தவெகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார்.  மேலும், நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.