விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லுவார் - செல்லூர் ராஜூ..!
விஜய்யால் அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம் அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லுவார்.
விஜய் பிரச்சாரத்திற்கு தடைகள் குறித்த கேள்விக்கு, ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள், அது முடியாது.. யாராச்சும் கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொல்கிறார்களா. அதிமுக பற்றிதான் பேசுகிறார்களே தவிர திமுக பற்றி யாராவது பேசுகிறார்களா.. டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா. உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என தெரித்தார்.


