அக்னிபாத் திட்ட விவகாரம்: ஆளுநர் ரவிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

 
chidambaram

அக்னிபாத் திட்டம் குறித்து ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

அக்னிபாத் போராட்டம்:  தெலாங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.  இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கி உள்ள நிலையில் பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.   தெலுங்கானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 

ravi

சென்னையிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில்,  இத்திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதனிடையே தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும் , இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயன் அளிக்கும் திட்டம்.  இத்திட்டத்தில் சேர்ந்து  நான்கு ஆண்டு முடிவில் ரூபாய் 12 லட்சம் கொடுக்கப்படுகிறது . சிறப்பான திட்டத்தை தவறாக புரிந்துகொண்டு இளைஞர்கள் பொது சொத்துகளுக்கு தீ வைக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார் .ஆளுநரின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "'அக்னிபாத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல . மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுனர் பங்கேற்பதற்கு இடம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.