"விஜய்க்கு வாழ்த்துக்கள் ஆனா அவரு முயற்சி வெல்லாது.." - ப.சிதம்பரம்

 
P chidambaram P chidambaram

தமிழ்நாடு பொருளாதாரத்தை உத்திர பிரதேசத்தோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது, இந்திய மாநிலங்களில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Congress has 'unique position' in Opposition ranks: P Chidambaram

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “தேர்தல் ஆணையத்தின் 66 இலட்சத்து  44 ஆயிரத்து 880 பேர முகவரி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கும் மூன்றாவது வகையை நாங்கள் ஏற்றுக் கொள்வவில்லை. இது தவறானது. வாக்காளர் பட்டியலை சீர்செய்ய வேண்டும். மீண்டும் வாக்காளர்களை சேர்க்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்திய கூட்டணி வலுப்படும், மேலும் வலுவடையும். தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெரும்.

தமிழக தேர்தலில் திமுகவிற்கும், தவெகாவிற்கும் இடையேதான் போட்டி என்று விஜய் கூறுகிறார்.  விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய கணிப்பு பொய்க்கும். தேர்தலில் இந்திய கூட்டணி வெல்லும். எத்தனை இடத்தில் போட்டி என்பதை திமுக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு செய்வார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு பெயர் மாற்றம் கண்டிக்கத் தக்கது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் ஒரு வரலாற்று பிழை. 12 கோடி மக்கள் நூறு நாள் வேலை வாய்ப்ப திட்டத்தில் பயனடைகின்றனர். அதனை மாற்றி அமைக்க நினைக்கும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.