தமிழ் நூலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

 
stalin stalin

காரைக்குடி-சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் நூலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் அழைப்பு விடுத்தனர். 

காரைக்குடி-சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் புதியதாக தமிழ் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  தமிழ் நூலகத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.