பேரதிர்ச்சி... ஆபத்தான உணவு பிரிவில் மினரல் வாட்டர்

 
water water

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.

தொகுக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை "அதிக ஆபத்துள்ள உணவு" என்று முத்திரை குத்த FSSAI இன் நடவடிக்கை கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல.


இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை "அதிக ஆபத்துள்ள உணவு" பிரிவில் சேர்த்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிவிப்பின்படி,  ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. FSSAI- இன் இந்த அறிவிப்பால் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல, அதாவது மினரல் வாட்டர் தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை என்று அர்த்தமல்ல. மாறாக, இது கடுமையான பாதுகாப்பு சோதனைகளை உறுதி செய்கிறது என்பதே பொருள் என நிபுணர்கள் கூறுகிறனர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கான தரம் மற்றும் பாதுகாப்பை பராமரிக்க தங்கள் தயாரிப்பை கட்டாயம் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் FSSAI அறிவுறுத்தியுள்ளது. பி.ஐ.எஸ். சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை நீக்கக்கோரி பாட்டில் குடிநீர் நிறுவனங்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து பி.ஐ.எஸ். சான்றிதழ் நீக்கப்பட்டு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தனது கட்டுபாட்டை கடுமையாக்கி உள்ளது.