படையப்பா ரி ரீலிஸ்- ரூ.30 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு
ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் படையப்பா திரைப்படத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி , நடிகை சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, ப்ரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலைசெய்யும் பெண்ணாக சௌந்தர்யா நடித்திருந்த நிலையில் அவருக்கு அப்படியே நேரெதிராக அசத்தலான வில்லியாக நீலாம்பரி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இன்னும் சொல்லப்போனால் ரம்யா கிருஷ்ணன் கெரியரில் படையப்பா முக்கிய படமாக இருக்கும் என்று சொல்லாம். அந்தளவிற்கு ரஜினிக்கு சமமாக பவர்புல்லான கதாபாத்திரமாக நீலாம்பரி கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் படையப்பா திரைப்படத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


