ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு
Jan 25, 2026, 15:23 IST1769334807459
குடியரசு தினத்தை முன்னிட்டு 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

2026-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை அறிவித்தது மத்திய அரசு. நீலகிரியைச் சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர்.கிருஷ்ணா, புதுச்சேரி சிலம்ப கலைஞர் கே.பழனிவேலு, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், கால்நடை விஞ்ஞானி டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


