பல்லாவரம்: அதிவேகமாக பறந்த கே.டி.எம் பைக்.. ரீல்ஸ் மோகத்தில் பறிபோன சிறுவன் உயிர்..!!

 
பல்லாவரம்: அதிவேகமாக பறந்த கே.டி.எம் பைக்.. ரீல்ஸ் மோகத்தில் பறிபோன சிறுவன் உயிர்..!! பல்லாவரம்: அதிவேகமாக பறந்த கே.டி.எம் பைக்.. ரீல்ஸ் மோகத்தில் பறிபோன சிறுவன் உயிர்..!!

பல்லாவரத்தில் அதிவேகமாக கேடிஎம் பைக்கை ஓட்டி, எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியதில்  15 வயது சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பல்லாவரம் சந்தை சாலையில் 17-வயது சிறுவன் ரீல்ஸ் எடுப்பதற்காக கே.டி.எம் பைக்கில் அதிவேகமாக சென்றபோது நேருக்கு நேர் பைக் மோதி விபத்தில் ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் வார சந்தை சாலையில்,    ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த அப்துல்அகமது (வயது- 17) ஏசி மெக்கானிக்கான இவர் இவரது அண்ணனுடைய  கே.டி.எம் பைக்கை ஓட்டிக்கொண்டு, தனது நண்பனான 11ம் வகுப்பு படிக்கும் சுஹேல் அகமது,
என்பவரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்த்தியபடி அதிவேகத்தில் வேகத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் ஹோண்டா ஆக்டிவாவில்  மூன்று பேர் வந்துள்ளனர்.  

அப்போது இரண்டு வண்டிகளும் நேருக்கு நேர் மோதியதில், 5 பேரும்   தூக்கி வீசப்பட்டனர். இதில் கே.டி.எம் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் சுஹேல் அகமது   சம்பவ இடத்திலே பரிதாபமாக உயர்ந்தார்.  மற்ற  நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனே பல்லாவரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

accident

மேலும் காயம் அடைந்த நான்கு பேரை தாம்பரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதமுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் ஹோண்டா ஆக்டிவா பைக்கில் வந்த மூன்று பேரும் மேற்குவங்கம் மாநிலத்தைச்  சேர்ந்த முகர்ஜி (வயது-23) அங்கீத் ராஜன் (வயது-23) மற்றும் டெல்லியை சேர்ந்த சர்மா (வயது-23) என்பதும் இவர்கள் விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செஃப் அக பணிபுரிந்து வருவதும் பணி முடித்துவிட்டு ஜமீன் பல்லாவரத்தில் தங்கியுள்ள அறைக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. அத்துடன் கேடிஎம் பைக்கில் வந்த சிறுவர்கள் இருவரும், ரீல்ஸ் எடுப்பதற்காக  அதிவேகமாக ஓட்டிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.