வரும் 26ம் தேதி "ஊராட்சி மணி" அழைப்பு மையம் திறப்பு

 
stalin

வரும் 26ம் தேதி  "ஊராட்சி மணி" அழைப்பு  மையத்தை திறக்க உள்ளார்.

ஊராட்சிகளில் உள்ள புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் “ஊராட்சி மணி” அழைப்பு மையம் மற்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சி மணி அழைப்பு மையத்தை வரும் 26ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்படவுள்ளது. இந்த “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் “155340” வழங்கப்பட்டுள்ளது.

stalin

மாவட்டங்களில் “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளது. “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் நேற்று மதியம் 3.00 மணிக்கு கூடுதல் இயக்குநர் (பொது) அவர்களால் காணொளி கூட்டம் நடத்தப்பட்டது.

M.K.Stalin

இந்த காணெளி கூட்டத்தில் தொடர்பு அலுவலர் (Nodal Officer) ஆக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கலந்துகொண்டனர். இத்துடன் “ஊராட்சி மணி” தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்கள் நிலை விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.