"பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமைக் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

 
tn

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்று வந்த பொதுதேர்வானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுத்தேர்வில்   பங்கேற்காத  மாணவர்களை  உடனடியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

tn

அந்த வகையில் மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் பொதுதேர்வினை எழுதிய நிலையில்  நேற்றுமுதல் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.  வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில்,  8 லட்சம் பேர் எழுதிய 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. 

school

இந்நிலையில்  10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தாராளமாக மதிப்பெண்களை வழங்க ஆசிரியர்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது கல்வித்துறை.  பள்ளிகல்வித்துறையின் இந்த அறிவிப்பால் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.