காதலுக்கு சம்மதிக்காத பெற்றோர்கள்- காதலர்கள் தற்கொலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் தனது மகள் திவ்யாவை (வயது 19), கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனது தந்தை வீட்டிலேயே திவ்யா வசித்து வருகிறார் இந்நிலையில் திவ்யா அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வேலை பார்க்கும் அன்பரசன் (வயது 28 ) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காத நிலையில் அன்பரசன் மற்றும் திவ்யா கடந்த சில நாட்களாக வீட்டைவிட்டு வெளியேறி, தனியாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அறிந்த அருகில் இருந்தவர்கள் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர. மேலும் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.