நாடாளுமன்றத் தேர்தல் 2024 - தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல்!

 
tn

திமுக சார்பில், மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. 

dmk
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகிற 10-3-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார். 

tn

 இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். வேட்புமனு ஆதரவாளர்களையோ அளித்தவர்கள், தங்களுக்கான பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

News Hub