நீ எங்கே.. என் அன்பே.. கிளியை கண்டுபிடித்து தந்தால் ரூ.5,000 பரிசு

 
நீ எங்கே.. என் அன்பே.. கிளியை கண்டுபிடித்து தந்தால் ரூ.5,000 பரிசு நீ எங்கே.. என் அன்பே.. கிளியை கண்டுபிடித்து தந்தால் ரூ.5,000 பரிசு

காணவில்லை கிளி படம் செல்போன் நம்பர் உடன் நாமக்கல் நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிப்பட்டுள்ளது.

‌நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் திரு.சட்டநாதன்(59) எல்.ஐ.சி யில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே கிளி வளர்ப்பதில் ஆர்வம். ஆனால் இந்திய வகை கிளிகளை வீட்டில் வைத்து வளர்க்க அனுமதி கிடையாது.என்பதால் கடந்த மே மாதம் தென் ஆப்ரிக்கா வின் காங்கோ வகையை சேர்ந்த கிளியை சென்னை கொளத்தூரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கொடுத்து வாங்கி வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 17 ந் தேதி பாசமாக வளர்க்கப்பட்ட கிளி வீட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக பறந்து சென்றுள்ளது. பின்னர் வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை. இதையடுத்து நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் கிளி யின் படம் செல்போன் எண்ணுடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். போஸ்டரில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது காணாமல் போன கிளியை கண்டு பிடித்து தந்தால் ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றார்.