“பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது" - பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

 
tn

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என்று பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

tn

தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல் , உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவரும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.  கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி வேலைவாய்ப்பாகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் பணியமர்த்தப்பட்டனர்.  இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இவர்களுக்கு ஐந்தாயிரம் மட்டுமே உயர்த்தப்பட்டு தற்போது பத்தாயிரம் ஊதியமாக பெற்று வருகின்றனர்.  வாரத்தில் 3 அரைநாள் மட்டும் பணியாற்றினால் போதுமானது.  அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் பணியாற்றலாம்,  ஒரு பள்ளிக்கு ஐந்தாயிரம் விதம் நான்கு பள்ளிகளுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் ஈட்டமுடியும் என்று அரசு அறிவிக்கப்பட்டு பின்னர் ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர் . 

schools open

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்.  மே மாதம் ஊதியம் கிடையாது என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மே மாதமும் ஊதியம் வழங்குமாறு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பிடித்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12 மாதங்கள் ஊதியம் வழங்கக் கேட்டு அண்மையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என்று அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது.