"110 விதியின் கீழ் பணிநிரந்தரம் என அறிவிக்க வேண்டும்" - முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!!

 
tn

110 விதியின் கீழ் பணிநிரந்தரம் என அறிவிக்க வேண்டும் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

stalin

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 26-8-2011 அன்று. 110 விதியின் கீழ் அறிவித்து, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,500 பகுதிநேர ஆசிரியர்கள். 2012-ம் ஆண்டில் பணியில் நியமிக்கப்பட்டனர். அது முதல், கடந்த 12ஆண்டுகளாகவே பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிகமாகவே பணி செய்து வருகிறோம். இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட 16, 500 பேரில் மரணம், பணி ஓய்வு என 6 ஆயிரம் பேர் தற்போது இப்பணியில் இல்லை. தற்போது வரை எங்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கின்ற, எங்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி, பணிநிரந்தரம் செய்யகோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை யில், 'திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என்று குறிப்பிட்டு, 181-வது வாக்குறுதியாக கோரிக்கை இடம்பெற்றது.

teachers

இந்த நிலையில், 110 விதியின் கீழ் தங்களை பணி நிரந்தரம்செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் எதிர்பார்த்து வருகிறோம். பகுதிநேர ஆசிரியர்களை தமிழக முதல்வர் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என ஈட்டப் பேரவையில் பல் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தும், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் கவன ஈர்ப்பு கடிதம் அளித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்காக, முதல்வரைச் சந்தித்து பல முறை நாங்கள் மனுக்கள் அளித் திருக்கிறோம். மனிதாபிமானம் கொண்டு. திமுசு தேர்தல் வாக்குறுதியான 181-ஐ அரசாணையாக்க முதல் வர் உத்தரவிட வேண்டும். அரசு கொள்கை முடிவு எடுத்து, பணிநிரந்தரம் செய்து, விதியின் கீழ் முதல்வர் இதை அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.