"1 முதல் 9 ஆம் வகுப்பு வரை' அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய திட்டம்!!

 
school reopen

தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்  மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.  அத்துடன் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது.  இந்த சூழலில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  

school

இந்த சூழலில் பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  ஜனவரி 3ஆவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் ஏப்ரல் கடைசி வாரத்திலோ  அல்லது மே முதல் வாரத்திலோ  பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

school

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல்  9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மீண்டும் கொரோனா  அதிகரித்து வரும் நிலையில் , ஆல்பாஸ்  செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  அதேசமயம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கூறப்படுகிறது.  இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.