பயணிகளே உஷார்..! மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது!!

 
1 1

இந்தியாவில் அன்ரிசர்வ்டு டிக்கெட், சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் யுடிஎஸ் டிக்கெட் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 


இந்த நிலையில் வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்து யுடிஎஸ் செயலி செயல்படாது என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்திய ரயில்வே வாரிய செயல்பாட்டு இயக்குநர் திலீப் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதாவது யுடிஎஸ் செயலியில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களுமே தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில் ஒன் (RailOne) செயலியில் இருக்கிறது என்பதால், எதற்கு ஒரே சேவைக்கு பல்வேறு செயலிகள் என்ற அடிப்படையில் யுடிஎஸ் செயலியின் பயன்பாட்டை நிறுத்துகிறோம் என கூறியுள்ளார்.


இனி பயணிகள் ரயில் ஒன் செயலி வாயிலாகவே அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை வாங்கி கொள்ள முடியும் என தெரிவித்திருக்கிறார். யுடிஎஸ் செயலியில் இருக்கக்கூடிய தங்களுடைய யூசர் நேம், பாஸ்வேர்ட்டை கொண்டே பயணிகள் ரயில் ஒன் செயலியில் லாகின் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்.


அனைத்து வகையான ரயில் சேவைகளையும் ஒருங்கிணைத்து தான் ரயில் ஒன் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது எனக் கூறும் அவர் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலியில் என்னென்ன சேவைகள் கிடைக்கிறதோ அவற்றையும் ரயில் ஒன் செயலியில் பெறலாம், அதேபோல உணவு ஆர்டர் செய்வது, புகார்களை அளிப்பது என ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளுக்கும் உங்கள் போனில் இந்த ஒரு செயலி இருந்தாலே போதும் மற்ற அனைத்தையும் நீங்கள் அன்இன்ஸ்டால் செய்துவிடலாம் எனக் கூறியிருக்கிறார்.


கடந்த ஆண்டு மத்திய அரசு ரயில் ஒன் செயலியை அறிமுகப்படுத்தியது. பயணிகள் இடையே இதனை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த சலுகை வரும் ஜூலை 14ஆம் தேதி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.பயணிகள் ஆர் வாலெட் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்யும்போது கூடுதலாக மூன்று சதவீத தள்ளுபடி என மொத்தமாக ஆறு சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.