"ஏ.சி. பழுது, ஃபேன் ஓடல... லைட் ஏரியல.. தண்ணி கூட இல்ல.."- அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் ​​​​​​​

 
s s

தாம்பரத்தில் ஏசி பெட்டிக்கு  பதில் இரண்டாம் வகுப்பு பெட்டி இருந்ததால் அபாய சங்கிலி இழுத்து   47 பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய சிம்பு விரைவு ரயிலில் இரண்டு ஏ.சி பெட்டிகள் இணைக்க வேண்டும். ஆனால் ஒரு ஏசி பெட்டியும், மற்றொரு ஏ.சி பெட்டிக்கு பதில் இரண்டாம் வகுப்பு பெட்டி (B-2) இருந்தது. இந்த பெட்டியில் ஏற வந்த 47 பயணிகள் ஏசி இல்லாமல் இருந்தது கண்டு ரயில்வே நிர்வாகத்தில் அலட்சியம் கண்டு அதிர்ந்ததனர். இதனால் ரயில் புறப்பட துவங்கும் முன்னர் அபாய சங்கிலியை இழுத்துள்ளனர்.

இதனால் ரயில் பிரேக் சிஸ்டம் ஜாம் ஆகி ரயில் புறப்படவில்லை விசாரிக்க வந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தபோது, அவர் நிலைய மேலாளருக்கு தகவல் அளித்தார். அதே வேளையில் ரெயில் நடைமேடையில் அமர்ந்து பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் கழிந்துவந்த நிலைய மேலாளரிடம் பயணிகள் அலச்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பு கட்டணம் போக மீத கட்டணம் வழங்க வேண்டும் என கேட்டனர். அதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் ஒன்றரை மணி நேரம் தமதமாக சிம்பு விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.