ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்.. பேரவை கதவுகளை மூடி வாக்கெடுப்பு..

 
Assembly


ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தனி தீர்மானத்திம் மீது,  சட்டபேரவை கதவுகளை மூடி  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

3 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.  ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை  அவை முன்னவர் துரைமுருகன்   கொண்டுவந்தார். அப்போது  அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

assembly

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய பாஜக அனுமதி கோரிய நிலையில், வாக்கெடுப்பின் போது எதிர்ப்பு தெரிவிக்கலாம் என சபாநாயகர் தெரிவித்தார். ஆளுநருக்கு எதிரான  தீர்மானத்தின்மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கும்படி அவைக்காவலர்களுக்கு  அவர் உத்தரவிட்டார். அதன்படி அவைக்கதவுகள் அடைக்கப்பட்டு,   ஒவ்வொரு உறுப்பினர் பெயரையும், குறிப்பிட்டு எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்றத்தில் தற்போது தான் எண்ணிக்கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெறுவது என்பது  குறிப்பிடத்தக்கது.

வெளிநடப்பு மற்றும் பேரவைக்கு வராத உறுப்பினர்களை தவிர அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதன்படி  அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு 144 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.   பாஜக உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகிய 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.  தீர்மானத்தை ஆதரிப்போர் எண்ணிக்கை நான்கில் 3 பங்குக்கும் மேல்  இருந்ததால்   தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்தார். தொடர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.