பாவேந்தரின் 133ஆம் பிறந்தநாள் - தமிழ்க் கவிஞர் நாளாக கொண்டாட்டம்!!

 
govt

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தரின் 133ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக 29.04.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது.

tn govt

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தரின் 133ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக 29.04.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது.

tn

தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி மா.சௌ. சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையுரை வழங்கவுள்ளார். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் அவர்களின் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு. பாலமுருகன் அவர்கள் நிறைவுரை வழங்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.