ராகுலின் இந்தியா ஒற்றுமை யாத்திரை வன்முறையை தூண்டிவிடுகிறதா?- ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 60 லட்சம் மதிப்பில் டயாலிஸ் உபகரணங்களுடன் கூடிய புதிய டயாலிஸ் சென்டர் கட்டிடம் பூமி பூஜையில் மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி, சிதம்பரம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோர் கலந்துகொண்டு கட்டிட பணிகளுக்கு பூஜை செய்து  துவக்கி வைத்தனர்.

ப சிதம்பரம்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமாகிய ப.சிதம்பரம், பிரதம மந்திரி சுற்றுப்பயணம் என்பது அவரது விருப்பம், அவருடைய கடமை, அவருடைய அதிகாரம், பிரதம மந்திரி சுற்றுபயணம் பற்றி எல்லாம் கருத்து சொல்ல முடியாது. கர்நாடகா, தெலுங்கானாவில் செம்மையான அரசு அமைந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இரண்டு மாநிலங்களிலும் 28 +17 என 45 இடங்களிலும் மிகப் பெரிய பெரும்பான்மை எங்களுக்கு கிடைக்கும்.

அஸ்ஸாமில் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையில் வன்முறையை தூண்டிவிட்டுள்ளார்கள். அஸ்ஸாம் முதலமைச்சருடைய பின்புலம் இல்லாமல் இந்த வன்முறை நடந்திருக்க முடியாது. வன்முறையை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே ஒற்றுமை பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிந்தது வன்முறை நடந்ததா?. ஏன் அஸ்சாமில் மட்டும் வன்முறை நடந்தது? காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் கட்சி மாறி அங்கே சட்டமன்ற உறுப்பிர்களை அழைத்து கொண்டு ஒரு ஆட்சி அமைத்தார். அவர் ஏன் வன்முறையை தூண்டி விடுகிறார். வன்முறையை கட்டுபடுத்த வேண்டுமா? இல்லையா?. தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுபயணம் மேற்கொண்டாரே வன்முறையா நடந்ததா? அஸ்ஸாம் முதலமைச்சரை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.