முதல்வர் ஸ்டாலினுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்ன நடைபயிற்சியாளர்கள்

 
stalin

கட்சிப்பணி, ஆட்சிப் பணிகளுக்கு இடையே உடற்பயிற்சியிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.   சைக்கிள் பயணம் ஜிம்மில் உடற்பயிற்சி என்று முதல்வரின் உடற்பயிற்சிகள் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் அவ்வப்போது வெளிவந்து வைரலாகி வருகின்றன.

 இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,  நடை பயிற்சியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு,  தமிழக அரசு நிர்வாகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று மகிழ்ச்சியை  தெரிவித்திருக்கிறார்கள். 

மேலும்,  5 கோடி மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை விரைந்து வழங்கி இருக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். நிர்வாகத்தில் நிறைய மாறுதல்கள் கொண்டு வருகிறீர்கள் இதை இப்படியே தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர்கள்,   இதே போல ஊழல் இல்லாத ஆட்சி நடத்தினால் இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் மாறி விடும்.  அதற்கு தங்கள் உடல் நலத்தை நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ளவேண்டும் ’ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.