மக்கள் பீதி..!! சென்னையை தொடர்ந்து கோவையிலும் காகங்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு..!

 
Q Q

கோவை - பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் சாலையோர மரத்தின் அடியில் காகங்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே சென்னையில் அடுத்தடுத்து காகங்கள் இறந்து வந்த நிலையில் தற்போது கோவையிலும் காகங்கள் இறந்து கிடந்ததால் பறவை காய்ச்சல் பாதிப் பாக இருக்குமோ? என்று அவர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சென்னையில் இறந்து கிடந்த காகங்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் உறுதியானது. அது போன்று குனியமுத்தூர் பகுதியிலும் மரத்தடியில் அடுத்தடுத்து காகங்கள் இறந்து கிடந்தன. இதற்கு பறவை காய்ச்சல் காரணமாக இருக்குமோ? என்ற பீதியை ஏற்ப டுத்தி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறும்போது பறவை காய்ச் சலுக்குள்ளான கோழிகள் மற்றும் பிற பறவை இனங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும். மேலும் பாதிக்கப்பட்ட பறவையி டம் இருந்தோ, மனிதரிடம் இருந்தோ, மற்றவர்களுக்கு, 'வெஸ்ட் நைல் வைரஸை' கொசுக்கள் கடத்தும் என்பதால், அவர்களும் எளிதில் பாதிக் கப்படும் வாய்ப்பு அதிகம்.

Advertisement

தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோழி இறைச் சிகள், முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்றனர்.