மக்கள் ஷாக்..!! மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்
Jan 2, 2026, 10:13 IST1767328991378
தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக சரிந்ததால், நகை பிரியர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று, சென்னையில் 22K ஆபரண தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.12,580க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,00,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து, ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.


