மக்கள் அதிர்ச்சி..! இனி எஸ்பிஐ கார்டு மூலம் கட்டணம் செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது..!

 
1

எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்ற. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டில் கட்டணம் செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் எந்தெந்த எஸ்பிஐ கார்டுகள் ரிவார்டு புள்ளிகளைப் பெறாது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

எஸ்பிஐ கார்டு எலைட்,
எஸ்பிஐ கார்டு பிரைம் ,
எஸ்பிஐ கார்டு ப்ரைம் அட்வான்டேஜ்,
எஸ்பிஐ கார்டு பிளாட்டினம்,
எஸ்பிஐ கார்டு பிரைம் புரோ,
எஸ்பிஐ கார்டு எலைட் அட்வாண்டேஜ்,
எஸ்பிஐ கார்டு பல்ஸ்,
சிம்ப்லி கிளிக் எஸ்பிஐ கார்டு,
சிம்பிள் கிளிக் அட்வான்டேஜ்,
எஸ்பிஐ கார்டு ஷௌர்யா செலக்ட்,
எஸ்பிஐ கார்டு பிளாட்டினம் அட்வாண்டேஜ்,
டாக்டர் எஸ்பிஐ கார்டு.

melum பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்புக் கட்டணத்தை ரூ. 75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.  வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் மட்டும் இன்றி, டெபிட் கார்டுகளுடன் தொடர்புடைய பிற கட்டணங்களையும் எஸ்பிஐ வங்கி உயர்த்த உள்ளது. கார்டின் வகையைப் பொறுத்து 0 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உயர்த்த உள்ளது.

மேலும், டெபிட் கார்டு மாற்றுவதற்கு ரூ. 300+ ஜிஎஸ்டி), டூப்ளிகேட் கார்டுக்கு ரூ. 50+ ஜிஎஸ்டி) வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது