ஹெச்.ராஜாவை தமிழக மக்களே நாட்டை விட்டு வெளியேற்றுவர் - செல்வப்பெருந்தகை தாக்கு..

 
ஹெச்.ராஜாவை தமிழக மக்களே நாட்டை விட்டு வெளியேற்றுவர் - செல்வப்பெருந்தகை தாக்கு.. ஹெச்.ராஜாவை தமிழக மக்களே நாட்டை விட்டு வெளியேற்றுவர் - செல்வப்பெருந்தகை தாக்கு..

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 1 பைசா கூட நிதி ஒதுக்காதது சரியே என்று பேசிய ஹெச்.ராஜாவை தமிழக மக்களே, தமிழ்நாட்டை விட்டு விரட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.   ஒன்றிய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,  கேரளாவுக்கு நிவாரணம் அளித்த முதலமைச்சருக்கு பாரட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.  மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பிற்கு நிவாரணமாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.  

selvaperunthagai

தொடர்ந்து மக்களவையில் சாதி தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை விமர்சித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த செல்வப்பெருந்தகை,  அனுராக் தாகூரின் பேச்சு அம்பேத்கரின் கருத்துகளுக்கு எதிரானது என்றும் கூறினார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வயநாடு பகுதியில் நிவாரண பணிகள் மேற்கொள்ள நீலகிரி, கூடலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் வயநாடு சென்றுள்ளதாக கூறினார்.  கார்த்தி சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்பான வார்த்தை போர் குறித்து தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும் என்றார். 

தூத்துக்குடி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பின் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட நிர்மலா சீதாராமன் உண்டியலில் காசு போடாதீர்கள், அர்ச்சகர் தட்டில் காசு போடுங்கள் என கூறுவதுதான் நிர்மலா சீதாராமனின் வழித்தோன்றல் என்றும்,  அதுபோன்று அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என கூறினால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வியெழுப்பினார்.  மேலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என கூறிய எச்.ராஜாவை தமிழக மக்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள் என்றும்,  தேர்தல் காலத்தில் மக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு தற்போது இப்படி பேசுவது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் விமர்சித்தார்.