மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

tn

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினம் பூமியையும் இயற்கையையும் நாம் பாதுகாக்க வேண்டும்.  அவற்றை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கினை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர் ,நிலம் ,காற்று, ஆகாயம், காடுகள் ,கடல் விலங்கினம் ,பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் மனித நடவடிக்கைகளால் விரும்பத் தகாத மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதன் விளைவு மனிதர்களுக்கு பெரும் பாதகமாகவும் அமைகிறது. 


இந்தாண்டு  உலக சுற்றுச்சூழல் தினக்கொண்டாட்டத்திற்கான கருப்பொருள்  சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டுக்கான #WorldEnvironmentDay மையக்கருவாக #BeatPlasticPollution அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய #மீண்டும்_மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.