ஊரடங்கை தவிர்க்க, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்..

 
சுங்கக்கட்டணம் மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதார தாக்குதல்! சுங்கக்கட்டண விலக்கு தேவை –  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க தடுப்புசியே அரசு கையில் எடுத்திருக்கும் ஆயுதம்.  தடுப்பூசி முகாம்கள், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டுப்பாடுகள், தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது என தடுப்புசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள், சில மாதங்களாகத்தான் வெளிக்காற்றை சுவாசிக்கத் தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்கள், அதற்குள்ளாக ஓமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊடங்கு பிறப்பிக்கப்படுவதை தவிர்க்க, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

lock down

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பூசி செலுத்துவதையும் கொரோனா சோதனை செய்வதையும் தீவிரப்படுத்துவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்!

ஓமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி, தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்!

ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.