மக்களின் உயிர் தான் முக்கியம்..தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக ரத்து செய்து ஓடி சென்று உதவிய அதிமுக வேட்பாளர்..!

 
1 1

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் படு ஜோராக நடைபெறுகிறது. பல நாட்களாக தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் டோஸ் கொடுக்கும் காட்சிகளை சமீப நாட்களாக பரப்புரையின் போது காணமுடிகிறது.

அப்போது, தொகுதி மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமை இழந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆத்திரமடைந்து ஆவேசமாக பேசுவதும், அவதூறாக பதிலளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆனால் இன்று நடந்ததோ வேறு... பிரச்சாரத்தின் போது சாலையில் நடந்து சென்ற பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததும் அதனை அதிமுக வேட்பாளர் முதலுதவி செய்து காப்பாற்றியதும் தான் ஹைலைட்.

தென் சென்னை மக்களவையின் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் பிரச்சாரத்தின் போது சாலையில் நடந்து சென்ற பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததை கண்டதும் தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு தான் மருத்துவர் என்ற ரீதியில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆட்டோவில் மருத்துவமனை அழைத்து சென்று இறுதிவரை உடனிருந்து பார்த்துக்கொண்டார். அவரின் மனித நேயத்தை கண்டதும் சுற்றியிருந்த பொதுமக்கள் அவரை மனதார பாராட்டினர்.