சட்டத்தை மதிக்காத ஆளுநர் - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

 
tn

161 சட்டப்பிரிவை மதிக்காத ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

supreme court

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.   இந்த வழக்கில் இருந்து தன்னை  விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.  இந்த வழக்கில் நீதிபதிகள் பேசும்போது மாநில அரசு அனுப்பக் கூடியே பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் பேரறிவாளன் விடுதலை வழக்கில்  14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்கள் அரசியல் சாசன சட்டம் 72 இன்படி குடியரசுத் தலைவரும் 161 படி ஆளுநரும் விடுவிக்கலாம் என்று கூறியது.  இந்த சூழலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர்.

rn ravi

இந்நிலையில் பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் தாமதித்து ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் இதன் மூலம் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது; அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.  இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளன் விடுதலை என்பது எப்பொழுதோ  கிடைத்திருக்க வேண்டும். இது காலதாமதம் தான். ஆனால் மகிழ்ச்சி என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.  அதேபோல் மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி என்று பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கூறியுள்ளார்.