"உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது " - மனம் திறந்த பேரறிவாளன்

 
tn

 பேரறிவாளன் முதல்முறையாக இன்று ஊடகத்தை சந்தித்து நல்லவர்கள் வாழ வேண்டும். கெட்டவர்கள் வீழ வேண்டும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

tn

பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.  சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  161 ஆவது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியது உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது . ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு.  முழுமையாக ஆராய்ந்து பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

tn
இந்நிலையில்  பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்று ருக்குறளை மேற்கோள் காட்டி, நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி .எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. இந்த நீதியமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டத்தை நிகழ்த்தினால் நாம் எதோ ஒரு கட்டத்தில் வெற்றியடைய முடியும். ஒரு சாமானியன் இது போன்ற வழக்கில் உள்ளே மாட்டிக்கொண்டால் அது மிகப் பெரிய துன்பமான சட்டப் போராட்டமாக இருக்கும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு. 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி. என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது.பெற்றோருக்கு வயது அதிகமாகும் நிலையில், அவர்களது வாழ்க்கையை திருடுகிறோமோ என்று எண்ணினேன். தாய் தந்தை உயிரோடு இருக்கும்போதே எனது விடுதலையை பார்க்க வேண்டும் என்று கருதினேன்" என்றார். பேரறிவாளன் தனது விடுதலைக்கு பிறகு முதல் முறையாக ஊடகத்தில் இன்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.