"பேரறிவாளன் விடுதலை" - அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்!!

 
tn

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலை செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் ஆனந்த  கண்ணீர் சிந்தினர். அத்துடன் அரசியல் தலைவர்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

tn

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், "பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை.  பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றியஅரசு என்னசெய்யப் போகிறது? " என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை பாஜக  ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்! " என்று பதிவிட்டுள்ளார். 

tn

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன், "பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது. அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 'தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி' என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்னைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும். பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்." என்று கோரியுள்ளார்.