தந்தை பெரியார் 145வது பிறந்தநாள் - அமமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தந்தை பெரியார் 145வது பிறந்தநாளையொட்டி சென்னையில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுத்தறிவு பகலவன், சமூக தீமைகளுக்கு எதிராக சமரசம் இல்லாமல் போராடிய தீர்க்கதரிசி, திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்தநாள் வருகின்ற 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.