பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

 
govt

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த விவகாரம் குறித்து ஆராய குழு அமைத்து  உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு (M.A. History) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலை தேர்வில் சாதியைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

tn

இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சேலம், பெரியார் பல்கலைக்கழக முதுநிலை வரலாறு (M.A- History) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலை தேர்வு வினாத்தாளில் சாதியைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை அரசு இணைச் செயலாளர் திரு. ம. இளங்கோ ஹென்றி தாஸ் என்பாரது தலைமையில்  விசாரணை குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

திரு. ம.இளங்கோஹென்றி தாஸ், தலைவர் அரசு இணைச் செயலாளர் உயர்கல்வித் துறை

திரு. ப.தனசேகர், அரசு துணைச்செயலாளர் உயர்கல்வித் துறை
விசாரணை அலுவலர்

திருமதி. B.S. விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர்/ திட்ட மேலாளர் (RUSA)
விசாரணை அலுவலர்

tn

பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு (M.A. History) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலை தேர்வில் சாதியைக் பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, தனது அறிக்கையை இவ்வாணை வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இக்குழு விசாரணை செய்வதற்கு தேவையான அனைத்து அலுவலக வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என சார்ந்த பல்கலைக்கழக பதிவாளர் அறிவுறுத்தப்படுகிறார் என்று அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.