விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

 
விஜய் விஜய்

சேலத்தில் டிச.4ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்! உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் - விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை துவங்க  உள்ளதாகவும் ,  வரும் டிசம்பர் நான்காம் தேதி சேலத்தில் கூட்டத்தில் பங்கேற்கொள்ளதாகவும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. சேலம் கோட்டை மைதானம் அல்லது  போஸ் மைதானம் ,  அல்லது சீலநாயக்கன்பட்டியில் தாளமுத்து நடராஜன் கட்டிடம் அருகே உள்ள தனியாரின்  மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் அனுமதி கோரப்பட்டது.  

இது தொடர்பாக ஆய்வு செய்துவிட்டு பின்னர் தெரிவிப்பதாக காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்த நிலையில், சேலத்தில் டிச.4ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டிச.3ம் தேதி கார்த்திகை தீபம், டிச.6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், டிச.4ம் தேதி தவிர மற்ற தேதிகளில் அனுமதி அளிக்க தயார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளதாகவும், அதை குறிப்பிட்டால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.