தீபாவளியை முன்னிட்டு திரையங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி

 
theatres

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 27 ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

“Theatres will not not be reopened until situation subsides” – Minister Kadambur Raju

தீபாவளி பண்டிகையை மக்கள் கோலகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே ரஜினி, கமல், விஜய் ,அஜித் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.  ஆனால்  இந்த வருடம்  ரஜினி, கமல், விஜய் ,அஜித் ஆகியோரின்  திரைப்படங்கள் வெளியாகவில்லை.  இருப்பினும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்,  கார்த்தி நடித்துள்ள சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றன.  இதன் காரணமாக தீபாவளி   பண்டிகை அன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது

ttn

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 21ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் தற்போது அதற்கான அனுமதிய அளித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது