பரந்தூர் விமான நிலைய அமைவிடத்திற்கு அனுமதி

 
பரந்தூர் விமான நிலையம்:  பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட  மக்கள் பேரணி.. 

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான Site Clearance வழங்க ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள வழிகாட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம்


காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு  ஈடுபட்டுவருகிறது. இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுத்த  ரூ.1,822.45 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க  நில எடுக்கும் பணி  தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய  திட்டத்திற்கு Site Clearance வழங்க ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள வழிகாட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. Site Clearance பெறுவதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் சமர்ப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பத்தை விமான நிலைய ஆணையம், சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை உள்ளிட்ட துறைகள் ஆய்வு செய்தன.

இதனைத் தொடர்ந்து பசுமை வெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுக் குழுவிடம் இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, Site Clearance வழங்க ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள வழிகாட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைக்கத்திடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையில்  விமான நிலையத்தை  4 கட்டங்களாக அமைக்க
32,704 கோடிகள் செலவு ஆகும் என்று  கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு 2029-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.